ஆனைக் கற்றாழை தாவரவியல் பெயர் : Furcraea foetida (L.) Hay. குடும்பம் : Agavaceae வளரிடம் : மலைகள், பாறைச் சரிவுகளில் மற்றும் வறட்சியான இடங்களில் தானாகவே வளர்கின்றது. வளரியல்பு : பெரிய மடல்களுடைய கற்றாழை இனம், இராகாசி மடல், இரயில் கற்றாழை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. தடித்த சிறு செடி, அடித்தண்டு மரக்கட்டை போன்று தடித்தது. இலைகள் ரோசா இதழ் அடுக்கமானவை. ஒரு மீட்டர், விளிம்பு முள் போன்ற வெளிநோக்குப் பற்கள் உடையவை, நுனி கருமையான முள்ளுடன் காணப்படும். வேரடி மலர்த்தண்டுகள் தடித்தவை. மலர்கள் பேனிக்கிள்கள் மகரந்ததாள்கள் 6. மருத்துவப் பயன்கள:
இதன் மடலைக் குருத்தின் கீழ் உள்ள கிழங்கு ஆகியவை மருத்துவப்
பயனுடையவை. சிறுநீர் பெருக்குதல் உடல் தேற்றுதல் ஆகியவை மருத்துவக் குணங்கள்.
வீக்கங்களுக்கு அதன் சாறு மிக முக்கியமானதாகும். குருத்தின் கீழ் உள்ள மென்மையான
கிழங்குப் பகுதியை எடுத்து சர்க்கரை கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு
வர வெள்ளை குணமாகும் |